சர்ச்சைக்குரிய மட்டக்களப்பு ஷரியா பல்கலைக்கழகத்தை நிர்மாணிக்க சவூதி அரேபியாவில் பெறப்பட்ட 100 மில்லியன் டொலர் நிதி தொடர்பான அறிக்கையை சமர்ப்பிக்குமாறு கொழும்பு பிரதான நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.
நேற்று இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இந்த நிதியை இலங்கைக்கு அனுப்பிய சவூதியின் அமைப்பு அந்த நாட்டில் தடைசெய்யப்பட்ட அமைப்பு என்பதை ஆராயுமாறு விடுக்கப்பட்ட வேண்டுகோளை அடுத்தே நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
இதேவேளை மட்டக்களப்பு கெம்பஸ் பிரைவேட் லிமிடெட் என்ற பெயரில் பங்கு பரிவர்த்தனை மையத்தில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பில் அறிக்கையை சமர்ப்பிக்குமாறு அந்த மையத்துக்கும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
இதில் நிறுவனத்தின் பணி;ப்பாளர்களான மொஹமட் ஹிஸ்புல்லாஹ் அஹமட் ஹிராஸ், மொஹமட் ஹிஸ்புல்லாஹ் ஹிராஸ், சாபிதீன், உட்பட்டவர்களி;ன் கணக்கு விபரங்களையும் தருமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.
கருத்து தெரிவிக்க