வெளிநாட்டு செய்திகள்

அமெரிக்காவில் ஒருவர் மட்டும் பயணம் செய்யும் விமானம் அறிமுகம் !

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் ‘லிப்ட்’ நிறுவனம், ‘ஹெக்ஸா’ எனப் பெயரிடப்பட்டு ஒருவர் மட்டும் பயணிக்கும் வகையில் விமானம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. இது ஒற்றை என்ஜின் கொண்டதும், 196 கிலோ நிறையில் 15 நிமிடங்களில் புறப்படும் வகையிலும்  தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த விமானம் அறுகோண வடிவத்திலும் தண்ணீரில் மிதக்க கூடிய வகையிலும் அமைக்கப்பட்டுள்ளது. அரசின் அனுமதியோடு டெக்சாஸ் மாகாணத்தில் சோதித்துப் பார்த்து வெற்றிகரமாக அமைந்ததால், அடுத்த ஆண்டு இந்த இலகு ரக விமானத்தை செயற்பாட்டுக்கு கொண்டு வர முயன்று வருவதாக ‘லிப்ட்’ நிறுவனம் தெரிவித்துள்ளது.

கருத்து தெரிவிக்க