முல்லைத்தீவு மாவட்டத்தில் மாத்தளன் பிரதேச சேர்ந்த மீனவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் தொடர்பில் இலங்கை மனித உரிமைஆணைக்குழு வின் ஆணையாளர் அம்பிகா சற்குணநாதன் தலைமையிலான குழுவினர் சென்று ஆராய்ந்துள்ளார்கள்.
இந்த கிராமத்தினை சேர்ந்த மீனவர்களுக்கு நவீனமுறையிலான மீன்பிடித் தொழிலுக்கு கடற்தொழில் நீரியல்வளத்திணைக்களம் அனுமதி மறுத்துள்ளதை எதிர்த்து கடந்த 02.07.19 அன்று மனிதஉரிமை ஆணைக்குழுவின் வவுனியா அலுவலகத்தில் முறைப்பாடு செய்துள்ளார்கள்.
இதற்கு அமைவாக மனித உரிமைஆணைக்குழுவின் ஆணையாளர் அம்பிகா சற்குணநாதன் தலைமையிலான மனித உரிமை அதிகாரிகள் நேரில் சென்று பார்வையிட்டு கலந்துரையாடி மீனவர்களின் பிரச்சனை தொடர்பில் கேட்டறிந்து கொண்டுள்ளார்கள்
இது தொடர்பில் கருத்து தெரிவித்த மாத்தளன் பிரதேச மீனவர்கள் முல்லைத்தீவு மாவட்டத்தில் எமக்கு அனுமதி மறுக்கப்படுவதற்கு முக்கியமான காரணம் ரவிகரனும் அதற்கு பின்னால் இருக்கும் கூட்டமைப்பின் ஒருசில பாராளுமன்ற உறுப்பினர்களும் என குற்றம் சுமத்தினர்.
தென்பகுதி,கிழக்கு மாகாணத்தில் இருந்து வந்து கடலில் தடைசெய்யப்பட்ட தொழிலினை செய்து வருகின்றார்கள் இலங்கையில் அனுமதிக்கப்பட்ட தொழிலினை செய்முடியாத நிலையில் நாங்கள் இருக்கின்றோம் இதற்கான அனுமதியினை கடற்தொழில் நீரியல்வளத்திணைக்களம் மறுத்து வருகின்றது தொடர்ச்சியாக இவ்வாறான நிலையினால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றது என்று அவர்கள் குறிப்பிட்டனர்
கருத்து தெரிவிக்க