சினிமா

சூர்யாவின் பிறந்த நாள் அன்று காப்பான் இசை வெளியீட்டு விழா!

சூர்யா, ஆர்யா, மோகன்லால், சாயீஷா, போமன் இரானி உள்ளிட்ட பலரின் நடிப்பில் உருவாகியுள்ள காப்பான் திரைப்படத்தின் இசை வெளியீடு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கே. வி. ஆனந்த் இயக்கத்தில் வெளிவந்த அயன் மற்றும் மாற்றான் திரைப்படங்களை தொடர்ந்து சூர்யா நடித்து வரும் திரைப்படம் காப்பான். இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிப்பதாகவும் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைப்பதாகவும் தகவல் ஏற்கனவே தகவல் வெளியாகியிருந்தது. மேலும், இப்படத்தில் மோகன்லால் பிரதமராகவும் அவருக்கு பாதுகாப்பு அளிக்கும் சிறப்பு பாதுகாப்பு படை தலைமை அதிகாரியாக சூர்யாவும் நடித்துள்ளனர். ஏற்கனவே படத்தின் ரீசர் மற்றும் சிறிக்கி முதலான பாடல்கள் வெளியாகி மக்களின் வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடிகர் சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷலாக வரும் 21 ம் திகதி திருவான்மியூரில் பிரமாண்டமாக நடைபெறும் என கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி, இப்படம் ஆகஸ்ட் 30ம் திகதி உலகம் முழுவதும் ரிலிசாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க