தமது கருத்தை மாறுபட்டு வெளியிட்ட இணையதளம் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்போவதாக இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்திருக்கின்றார்.
பௌத்த பிக்குகள் தொடர்பாக வெளியிட்ட கருத்து ஒன்றை, ஒரு இணையதளம் தமக்கு ஏற்றவாறு செம்மை செய்து அதனை விசாலப்படுத்தி இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன் காரணமாக பௌத்தத் துறவிகளும் தமக்கும் இடையிலான முரண்பாடுகள் அதிகரித்துள்ளமை இப்போது காணக்கூடியதாக இருக்கின்றது. எனவே இதற்கு முழுமையான காரணத்தை இணையதளம் பொறுப்பேற்க வேண்டும் என்றும் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்திருக்கின்றார்.
பௌத்தமதம் எப்போதும் அமைதி, சமாதானம், சகிப்புத்தன்மை என்பதை போதித்து வந்து இருக்கின்றது எனினும் இந்த வீதியில் இறங்கி போராடும் போராட்டங்களை நடத்தும் பௌத்த பிக்குகள் தொடர்பாகவே தாம் கருத்தை வெளியிட்டதாக குறிப்பிட்டிருந்தார்.
குறித்த கருத்தை இணையதளம் ஒன்று தமக்கு ஏற்றவாறு செம்மை செய்து தமக்கும் மகா சங்கத்தினர் இடையே முரண்பாடுகளை தோற்றுவிக்கும் வகையில் செய்யப்பட்டுள்ளதாக ரஞ்சன் ராமநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை ரஞ்சன் ராமநாயக்க கருத்து தொடர்பில் பிரதம மந்திரி ரணில் விக்ரமசிங்க தனிப்பட்ட விளக்கத்தை கோரி கடிதம் ஒன்றை கோரியிருக்கின்றார்.
மேலும் அரசியல்வாதிகளும் ரஞ்சன் ராமநாயக்க கருத்தை விமர்சித்துள்ளார்கள்.
கருத்து தெரிவிக்க