தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய இந்த வாரத்தில் ஜனாதிபதி சிறிசேனவை சந்திக்க இருப்பதாக தெரிவித்திருக்கிறார்.
இந்த வருடத்துக்குள் மாகாணசபை தேர்தலை நடத்துவதற்காண ஏற்பாடுகள் குறித்து ஆராயப்படும் என அவர் தெரிவித்திருக்கின்றார்.
லண்டன் சென்றிருந்த ஜனாதிபதி நாடு திரும்பியுள்ள நிலையில் இந்த பேச்சுவார்த்தை இடம்பெறவிருக்கின்றது.
மாகாண சபை தேர்தலை நடத்துவதற்கான சட்ட நடவடிக்கைகள் தற்போது பரிசீலிக்கப்பட்டு வருகின்றன.
நாடாளுமன்றத்தில் இது தொடர்பான பிரேரணை கொண்டுவரப்பட்டது அது அங்கீகரிக்கப் படவேண்டும் அவ்வாறு அங்கீகரிக்கப்படும் போது இந்த மாகாண சபை தேர்தலை நடத்தக் கூடியதாக இருக்கும் என்பது தெரிந்த விடயம். அந்த வகையில் நீதிமன்ற உத்தரவு ஒன்று தொடர்பாக இதன்போது கலந்துரையாடப்பட இருக்கின்றது.
இந்த மாகாண சபைத் தேர்தலை நடத்துவது தொடர்பில் இந்த நீதிமன்ற உத்தரவு கிடைக்குமாக இருந்தால் அதன் பின்னர் குறித்த தேர்தலை நடத்தலாம் என்ற ஒரு கருத்தும் வெளியாகி இருக்கின்றது.
ஜனாதிபதி தேர்தல் ஒன்று இவ்வருட டிசம்பருக்குள் நடத்தப்படும் என்ற நிலையில் இந்த மாகாண சபை தேர்தல் தொடர்பான பேச்சுக்களும் இடம் பெற்று உள்ளன.
ஜனாதிபதி தேர்தலை, தாமதப் படுத்துவதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் முனைப்புக்கு மஹிந்த தேசப்பிரிய தேர்தல் ஆணைக்குழு தலைவரும் உடன்பட்டு செல்கின்றார். என்று கருத்தை நேற்று பொதுஜன பெரமுனவும் குற்றச்சாட்டாக முன் வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்து தெரிவிக்க