உள்நாட்டு செய்திகள்புதியவை

‘சிகரெட் மீதான ஹலால் வரியை அமுல்படுத்துவதில் தாமதம்’

சிகரெட் மீதான ஹலால் வரிகளை அதிகரிப்பது குறித்து நிதி அமைச்சின் வர்த்தமானியை அமுல்படுத்துவதில் தாமதம் ஏற்படுவதாக மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையம் (ADIC) சுட்டிக்காட்டியுள்ளது.

ஜூலை 10 ம் திகதி நிதியமைச்சர் கையெழுத்திட்ட வர்த்தமானி அறிவித்தலின் படி 67 மிமீ – 72 மிமீ நீளம் கொண்ட 1000 சிகரெட்டுகளின் ஹலால் வரி ஜூலை 11 முதல் ரூ 37,000 வரையில் அதிகரிக்கப்பட்டிருக்க வேண்டும்.

வரி விகிதங்களுக்கு ஏற்ப புகையிலை நிறுவனங்கள் சந்தை விலையை திருத்துவதால், ஒரு சிகரெட்டின் விலை குறைந்தது ரூ .15 ஆக உயரும்.

சந்தையில் விலை விசாரணைகளில் இருந்து நாம் ஆராய்ந்ததன் அடிப்படையில் குறித்த பிரிஸ்டல் மற்றும் நேவி கட் பிராண்ட் சிகரெட்டுகளின் விலைகள் ஜூலை 14 வரையிலும் கூட அதிகரிக்கப்படவில்லை” என்று எடிக் நிறுவனம் குறிப்பிட்டது.

கருத்து தெரிவிக்க