முன்னாள் உலகக் கிண்ணம் வென்ற அணித்தலைவரும் அரசியல்வாதியுமான அர்ஜுன ரணதுங்க இந்த ஆண்டு உலகக் கிண்ணம் இங்கிலாந்துக்கும் நியூசிலாந்திற்கும் இடையில் பகிரப்பட்டிருக்க வேண்டும் என்று கருத்து தெரிவித்துள்ளார்.
மிரிகமயில் இடம்பெற்ற ஒரு நிகழ்வின் போது அவர் இதனை கூறியுள்ளார்.
“இந்த ஆண்டின் உலகக் கிண்ண இறுதிப் போட்டி நான் பார்த்த மிகச் சிறந்த போட்டிகளில் ஒன்றாகும்”
நியூசிலாந்திற்கு இடையிலான ஒரு விறுவிறுப்பான போட்டியில் இங்கிலாந்து அதிக பவுண்டரிகளை அடித்ததன் அடிப்படையில் உலகக் கிண்ணம் அவர்களுக்கு வழங்கப்பட்டது.
எவ்வாறாயினும் இரு அணிகளின் மதிப்பெண்கள் சமநிலையில் காணப்பட்டது என அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை இலங்கை அணியின் செயற்பாடு குறித்து கேட்க்கப்பட்ட போது,
எதிர்பார்க்கப்பட்டதை விட இலங்கை அணி சிறப்பாக செயல்பட்டதாக அவர் கூறினார்.
” ஒரு சரியான அணியைத் தேர்ந்தெடுத்திருந்தால் அரையிறுதிக்குள் நுழைந்திருக்க முடியும்” என தெரிவித்த அவர் துடுப்பாட்டத்தில் நடுத்தர வரிசையில் பல சந்தர்ப்பங்களில் எமது அணியினர் செயல்படத் தவறியுள்ளனர் என்று சுட்டிக்காட்டியுள்ளார்.
கருத்து தெரிவிக்க