கதிர்காம புனித பூமியை அண்மித்த இடங்களில் அமைக்கப்பட்டுள்ள தானசாலைகள் மற்றும் வர்த்தக நிலையங்கள் சோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதற்கென 44 அதிகாரிகள் கடமையில் ஈடுபட்டுள்ளதாக சங்கத்தின் செயலாளர் மஹேந்திர பாலசூரிய தெரிவித்துள்ளார்.
கதிர்காம பகுதியில் உணவு விநியோகம் தொடர்பிலும் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
உணவுகளின் தரம் தொடர்பில் சோதனையிடும் பணிகளில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 2 ம் திகதி முதல் ஆரம்பமான குறித்த வேலைத்திட்டம் நாளை மறுதினம் வரை முன்னெடுக்கப்படும். இதுவரை 300 க்கும் அதிகமான உணவு தயாரிப்பு நிலையங்கள் சோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளன.
இதேவேளை குறித்த பகுதியில் பதிவு செய்யப்பட்டுள்ள 150 தானசாலைகள் குறித்தும் நாளாந்தம் சோதனைகள் இடம்பெறுவதாக அவர் குறிப்பிட்டார்.
நாளை தினம் அதிகளவான மக்கள் கதிர்காமம் புனித பூமிக்கு வருகை தரவுள்ளனர். இதனால் உணவு விற்பனை நிலையங்களை சோதனையிடும் பணி விரிவுபடுத்தப்படுமென பொது சுகாதார பரிசோதகர் சங்கத்தின் செயலாளர் மஹேந்திர பாலசூரிய மேலும் தெரிவித்தார்.
கருத்து தெரிவிக்க