2025 ஆம் ஆண்டளவில் வலுவான நாடு என்னும் தொனிப்பொருளில் நிதி அமைச்சு முன்னெடுத்துள்ள கம்பெரலிய வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டு ஒரு வருடம் பூர்த்தியாகியுள்ளது.
நிக்கவெரட்டிய தேர்தல் தொகுதியின் ரஸ்நாயக்கபுர பிரதேச செயலக பிரிவின் கணுக்கெட்டிய முடத்தவ குள அபிவிருத்தி வேலைத்திட்டத்துடன் கடந்த வருடம் ஜூலை மாதம் 15 ஆம் திகதி கம்பெரலிய வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.
பிரதமர் ரணில் விக்ரமசிங்க பிரதம அதிதியாக அந்த நிகழ்வில் கலந்து கொண்டார். நாடு தழுவிய ரீதியில் இதன் ஊடாக அபிவிருத்தி திட்டங்களை மேற்கொள்ள நிதி அமைச்சு 800 கோடி நிதியை ஒதுக்கீடு செய்துள்ளது.
இதேவேளை கம்பெரலிய கிராமிய அபிவிருத்தி திட்டத்தின் கீழ் ஒவ்வொரு தேர்தல் தொகுதிகளுக்கும் வழங்கப்பட்ட 20 கோடி ரூபா நிதியை அடுத்த வாரத்தில் இருந்து 100 சதவீதத்தால் அதிகரிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
கருத்து தெரிவிக்க