திபெத்திய 14 வது புத்த மத தலைவராக தலாய்லாமா உள்ளார். தற்போது அவரின் உடல் நலக் குறைவு, வயது முதிர்வு காரணமாக 15 வது புத்த மத தலைவரை அம்மதத்தினர் தேர்ந்தெடுக்க உள்ளனர்.
இந்நிலையில் அடுத்த தலாய்லாமா யார் என்பதை சீனா தான் முடிவு செய்யும். இதில் இந்தியா தலையிட்டால் அது இரு நாட்டு உறவிலும் பாதிப்பை ஏற்படுத்தும் என சீனா தெரிவித்துள்ளது.
திபெத்தின் பிரதி அமைச்சர் அந்தஸ்தில் உள்ள சீன அதிகாரி வாங் நேங் ஷெங் குறிப்பிடுகையில், “தலாய்லாமா நியமன விடயம், வரலாறு, மதம், அரசியல் சார்ந்தது. அதற்கான வரலாற்று அமைப்புகளும் நடைமுறைகளும் உள்ளன. தலாய்லாமா யார் என்பதை தனிப்பட்ட நபரோ அல்லது வெளிநாட்டில் உள்ள மக்களோ தீர்மானிக்க முடியாது” என தெரிவித்திருந்தார்.
கருத்து தெரிவிக்க