உலகில் கருவாப்பட்டை ஏற்றுமதி செய்யும் நாடுகளின் பட்டியலில் இலங்கை முதலிடத்தில் உள்ளதாக சீனா தெரிவித்துள்ளது.
சீனாவின் மிக பிரசித்திபெற்ற சந்தைப்படுத்தல் நிறுவனம் நடத்திய ஆய்வில் இந்த விடயம் தெரியவந்துள்ளது.
அமெரிக்கா, மெக்சிகோ, பெரு, கொலம்பியா, ஈகுவேட்டர் ஆகிய நாடுகள் இலங்கையின் கருவாப்பட்டையை அதிகளவில் இறக்குமதி செய்கின்றன.
உலகிலேயே ஆசிய-பசுபிக் பிராந்தியத்தில் அதிகளவில் கருவாப்பட்டை உற்பத்தி செய்யப்படுகின்றது. இந்தோனேஷியா அதிகளவில் கருவாப்பட்டை உற்பத்தி செய்யும் நாடாக காணப்படுகின்றது.
இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தில் முறையே சீனா மற்றும் வியட்னாம் நாடுகள் காணப்படுகிறன.
எனினும் இலங்கை கருவாப்பட்டை தரம் சிறப்பாக இருப்பதாக உலகளாவிய ரீதியில் நம்பிக்கையை வென்றுள்ளது.
இதேவேளை இதன் மூலம் இலங்கை அதிகளவான வருமானத்தையும் பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
கருத்து தெரிவிக்க