இந்த வருட இறுதியில் வங்கி கடனுக்கான வட்டி வீதம் குறைக்கப்படும் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
பத்து இலட்சம் காணி உறுதிப் பத்திரங்கள் வழங்கும் தேசிய வைபவத்தின் ஒரு பகுதியாக திருகோணமலை மாவட்டத்திற்கான 2050 உறுதிப் பத்திரங்கள் வழங்கும் நிகழ்வு இன்று திருகோணமலை மக்கேய்சர் மைதானத்தில் இடம் பெற்றது.
இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.இதில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,
வங்கி மூலம் அறவிடப்படும் வட்டி 12 சதவீதத்தில் இருந்து 10 சதவீதமாக குறைக்கப்பட உள்ளது. இதனால் பெரும் எண்ணிக்கையிலானோர் நன்மையடைவர்.
தற்போது எத்தகைய சவால்களையும் எதிர் கொள்வதற்கு அரசாங்கம் தயாராக இருக்கிறது. எதிர் கட்சியினர் அரசாங்கத்தக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை சமர்ப்பித்தனர்.
இந்த நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பான விவாதத்தின் போது நாடா ளுமன்றத்தில் கோரத்தை முன்னெடுப்பதற்கு கூட எதிர்கட்சியினரால் முடியவில்லை என இதன் போது சுட்டிக்காட்டினார்.
அத்துடன் இந்த வருட ஆரம்பத்தில் வெளிநாட்டு சுற்றுலாப்பயனிகள் 166 000 பேர் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர், இதேவேளை தாக்குதலின் பின்னர் 37 ஆயிரமாக குறைந்த பயணிகளின் எண்ணிக்கை ஜுன் மாதத்தில் 63 000 ஆக அதிகரித்தது என குறிப்பிட்டுள்ளார்.
குறித்த நிகழ்வில் காணி மறுசீரமைப்பு அமைச்சர் கயந்த கருணாதிலக மற்றும் திருகோணமலை மாவட்ட நாடா ளுமன்ற உறுப்பினர்களான அப்துல்லா மஃறூப், எம்.எஸ்.தௌபீக், கே.துரைரட்ணசிங்கம், இம்ரான் மஹ்ரூப், சந்திப் சமரசிங்க போன்றோர் கலந்து கொண்டனர்.
கருத்து தெரிவிக்க