உள்நாட்டு செய்திகள்வடக்கு செய்திகள்

‘இந்து மக்களின் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு கிட்டும்’

நீராவியடி திருக்கேதிஸ்வரம் கன்னியா போன்ற பகுதிகளில் நடைபெறும் பிரச்சினைகள் அனைத்திற்கும்  நிரந்தர தீர்வினை பெற்றுக் கொடுப்பேன் என அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

இந்து சமய விவகார அமைச்சின் கீழ் நடமுறைப்படுத்தப்படும் தெய்வீக சேவைத் திட்டம் யாழ்ப்பாணத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஆரம்பித்து வைக்கப்பட்டது.

அமைச்சர் மனோ கணேசன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு நீராவியடி மற்றும் கன்னியா ஆகிய பகுதிகளில் தற்போது நடைபெறும் பிரச்சினை இந்து மக்களுக்கும் பௌத்த மக்களுக்கும் உள்ள பிரச்சினை.

திருக்கேதிஸ்வரத்தில் இந்து தமிழர்களுக்கும் கத்தோலிக்க தமிழர்களுக்கும் இடையில் உள்ள பிரச்சினையாகும்.

இங்கு தமிழ் இனத்தை இந்து என்றும் கத்தோலிக்கவர் என்றும் இரண்டாக பிரிக்கின்றார்கள்.

நீராவியடியிலும் கன்னியாவிலும் நிலைபெற வேண்டும் என்று நாம் எதிர்பார்ப்பதை போலவே திருக்கேதிஸ்வர விவகாரத்திலும் எதிர்பார்க்கின்றோம்.

எந்த காரணத்திதை கொண்டும் தமிழ் இனத்தை பிரிப்பதற்கோ தமிழ் இனத்தினையும் அதன் கலாசாரத்தையும் விலை பேசவோ இடமளிக்க போவதில்லை.

தமிழ் இந்து வரலாறும் ஒட்டுமொத்த இலங்கை வரலாற்றில் சேர்க்கப்பட வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த திட்டத்தின் கீழ் வடக்கு மாகாணத்தில் உள்வாங்கப்பட்ட சுமார் 245 ஆலயங்களை புணர்நிர்மாணம் செய்வதற்கான நிதி வழங்கிவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க