சீனாவில் உள்ள மிக நீளமான கால்வாய் ‘கிராண்ட் கெனால்’ ஆகும். இந்தக் கால்வாய் 1700 கிலோ மீற்றர் தூரத்திற்கு நீண்டு செல்கிறது. சீனாவின் நான்கு பெரிய நதிகளை இணைத்துக் கொண்டு அழகிய இடங்களை ஊடறுத்து ஓடுகிறது.
முற்காலத்தில் சீனப் பேரரசர்களால் தம் குடி மக்களை கட்டாயப்படுத்தி வெட்டி கட்டப்பட்டது இக்கால்வாய். படைவீரர்களை விரைவாக இடம் விட்டு இடம் மாற்றுவதன் நோக்கத்தில் கட்டப்பட்டது.
தற்போது இதன் ஒரு பகுதி இப்போதும் பயன்பாட்டில் இருக்கிறது. உணவுப் பொருட்களை எடுத்துச் செல்வதற்கும், தொழிற்சாலைகளுக்கு மூலப் பொருட்களை கொண்டு செல்வதற்கும் பயன்படுத்தப்படுகிறது.
மேலும் உலகிலேயே மிக நீளமான கால்வாயாகவும் கருதப்படுகிறது.
கருத்து தெரிவிக்க