நேற்று (நவம்பர் 29) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான சலுகைகள் தொடர்பில் கருத்து தெரிவித்திருந்தார்.
அதற்கிணங்க புதிய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான சிறப்புரிமைகள் முன்னரை போன்றே வழங்கப்படுமெனவும் இதுவரையில் எவ்வித வரப்பிரசாதங்களும் குறைக்கப்படவில்லையெனவும் பாராளுமன்ற செயலாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
அதனடிப்படையில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களால் மீண்டும் கையளிக்கப்பட்ட சுமார் 25-30 வீடுகள் தற்போது புனரமைக்கப்பட்டு வருவதாகவும் எதிர்காலத்தில் அவை புதிய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படுமெனவும் கூறியுள்ளார்.
அத்தோடு பாராளுமன்றத்திலிருந்து 40 கிலோமீற்றர்களுக்கு அப்பால் வதிவிடங்களை கொண்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள் உத்தியோகப்பூர்வ இல்லங்களுக்காக விண்ணப்பிக்க முடியுமெனவும் பாராளுமன்ற செயலாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
கருத்து தெரிவிக்க