உள்நாட்டு செய்திகள்முக்கிய செய்திகள்

‘சம்பந்தனுக்கு ரணில் வழங்கிய லஞ்சம்’ – அம்பலப்படுத்தினார் அநுர!

” மஹிந்த ராஜபக்சவும், சம்பந்தனும் உரிய வகையில் தீர்மானம் எடுத்திருந்தால் நம்பிக்கையில்லாப் பிரேரணையை வெற்றிகரமாக நிறைவேற்றி இருக்கலாம்.” என ஜே.வி.பியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்க தெரிவித்தார்.

நம்பிக்கையில்லாப் பிரேரணைமீதான வாக்கெடுப்பு நிறைவடைந்த பின்னர், அது தொடர்பில் ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

” சில அரசியல் கட்சிகள் மக்கள் பக்கம்நின்று தீர்மானங்களை எடுப்பதில்லை. இதன்காரணமாகவே நீதியான செயற்பாடுகள் தோல்வியடைகின்றன.

குறிப்பாக  மாலை 4.30 மணிக்கே வெற்றிவாய்ப்பு கைநழுவிபோனது. அதாவது கல்முனை வடக்கு தமிழ் உப பிரதேச செயலகம் தரமுயர்த்தப்படும் என்ற எழுத்துமூல உத்தரவாதத்தை பிரதமர் ரணில்விக்கிரமசிங்க, சம்பந்தனுக்கு வழங்கினார்.

மறுபுறத்தில் நிதி அமைச்சர் மங்கள சமரவீரவும் அரை மணிநேரத்துக்குள் நிதி ஒதுக்கீடு செய்வதற்கு நடவடிக்கை எடுத்தார்.

இப்படியான இலஞ்ச அரசியலாலேயே 119 வாக்குகளை அரசாங்கம் பெற்றது. இல்லையேல் 105 வாக்குகளே கிடைத்திருக்கும்.” ” என்றும் அவர் கூறினார்.

கருத்து தெரிவிக்க