கிழக்கு செய்திகள்

மட்டக்களப்பில் வறட்சி: பவுசர் மூலம் நீர்விநியோகம்

போரதீவுப்பற்றுப் பிரதேசத்தில் பவுசர்மூலம் நாளாந்தம் 100000 லீற்றர் குநீர் வழங்கப்படடு வருகின்றது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போது அதிக உஷ்ணத்துடன் கூடிய காலநிலை நிலவி வருகின்றது. இந்நிலையில் உன்னிச்சை, நவகிரி, புழுக்குநாவ கடுக்காமுனைக்குளம் உள்ளிட்ட அனைத்து பெரிய குளங்களின் நீர் மட்டம் மிக வெகுவாக குறைந்துள்ளது.

அத்துடன் தும்பங்கேணி, பெரியபோரதீவு, பழுகாமம், வெல்லாவெளி உள்ளிட்ட பல பகுதிகளில் அமைந்துள்ள சிறிய குளங்கள் அனைத்தும் மற்றாக வற்றியுள்ளன. இவற்றால் மக்கள் குடிநீர் பிரச்சனையை எதிர்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் போரதீவுப் பற்றுப்பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள அதிக வரட்சி காரணமாக நாளாந்தம் பவுசர்கள் மூலம் 100000 லீற்றர் குடி நீர் மக்களுக்கு வழங்கிவருவதாக போராதீவுப்பற்றுப் பிரதேச சபையின் தவிசாளர் யோ.ரஜனி வியாழக்கிழமை (11) தெரிவித்தார்.

வறட்சி அதிகரித்து செல்லும் நிலையில் மக்கள் குடிநீரைச் சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும் என தவிசாளர் மேலும் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதேவேளை வாய்க்கால்கள், குளங்களிலும் நீர் வற்றியுள்ளமையினால் கால்நடைகளும் இறந்துவருவதாக கால்நடைப் பண்ணையாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

 

கருத்து தெரிவிக்க