மணிரத்தினத்தின் ஆரம்பகால படங்களுக்கு இசையமைப்பாளராயிருந்த இசைஞானி இளையராஜா. பின்னர் ரோஜா படத்தில் ஏ. ஆர் ரஹ்மானை அறிமுகம் செய்திருந்தார். அப்போதிலிருந்து தற்போது வரை ஏ. ஆர் ரஹ்மானே மணிரத்னத்தின் படங்களுக்கு இசையமைத்து வருகிறார். இருப்பினும் மற்ற இயக்குனர்களின் இயக்கத்தில் மணிரத்னத்தின் தயாரிப்பில் வெளிவரும் படங்களுக்கு வேறு இசையமைப்பாளர்களை பயன்படுத்தி வருகிறார். அந்த வகையில் தனது உதவியாளர் தனசேகரன் இயக்கும் “வானம் கொட்டட்டும்” என்ற படத்திற்கு பிரபல பின்னணிப் பாடகர் சித்ஸ்ரீராமை இசையமைப்பாளர் ஆக்கியிருக்கிறார் இயக்குனர் மணிரத்னம். பின்னணி பாடகரான சித்ஸ்ரீராம் ‘ஜ, நானும் ரவுடிதான், டிக் டிக் டிக், மற்றும் விஸ்வாசம்’ படங்களிலிருந்து பல சூப்பர் ஹிட் பாடல்களை பாடிய இவர் ஏ. ஆர். ரஹ்மான் மற்றும் அனிருத் உள்ளிட்டோரின் இசையிலும் பாடியுள்ளார். சித்ஸ்ரீராம் இசையமைக்கவுள்ள இப்படத்தில் விக்ரம் பிரபு, ஐஸ்வர்யா ராஜேஷ் ஜோடி சேர்வதாகவும், மணிரத்னம் கதை, வசனம் எழுதியிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கருத்து தெரிவிக்க