உள்நாட்டு செய்திகள்

சிறைச்சாலைகளில் ‘விசேட புலனாய்வு பிரிவு’!

சிறைச்சாலைகளில் விசேட புலனாய்வுப் பிரிவை ஸ்தாபிப்பதற்கு தேசிய பாதுகாப்பு சபைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதற்கான பிரேரணையையும், சட்ட ஏற்பாடுகளையும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மற்றும் நீதி அமைச்சர் தலதா அத்துகோரள விரைவில் முன்னெடுப்பார் என அரசாங்க தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

நாட்டிலுள்ள சிறைச்சாலைகளுக்குள் பல்வேறு குற்றச்செயல்கள் இடம்பெற்றுவருவதாக சிறைச்சாலை ஆணையாளர் நாயகத்துக்கு முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. இவை தொடர்பில் சம்பந்தப்பட்ட தரப்புக்கு சுட்டிக்காட்டியதையடுத்தே மேற்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

 

கருத்து தெரிவிக்க