முல்லைத்தீவு மாவட்டத்தின் பழைய செம்மலை நீராவியடிப் பிள்ளையார் பிள்ளையார் ஆலய வளாகத்தை சுவீகரித்து அங்கு பௌத்த விகாரை அமைத்துள்ள பௌத்த துறவியான கொலம்ப மேதாலங்க தேரர் உள்ளிடட தரப்பினர் கடந்த ஜனவரி மாதம் 14 ஆம் திகதி வழிபாடுகளுக்கு சென்ற மக்களோடு முரண்பட்ட நிலையில் குறித்த இடத்திலேயே அமைதிக்கு பங்கம் ஏற்பட்டதாக தெரிவித்து முல்லைத்தீவு காவல்துறையினரால் முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டிருந்தது
விசாரணைகள் இடம்பெற்று வந்த நிலையில் குறித்த பகுதி தொல்பொருள் திணைக்களத்துக்கு உரியது என பௌத்த துறவிகள் சார்பானவர்களால் நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டது.
எனினும் குறித்த பிரதேசம் தொல்பொருள் திணைக்களத்துக்கு இன்னமும் வர்த்தமானி மூலம் அறிவிக்கப்படவில்லை எனவும் குறித்த பகுதி பிரதேச செயலாளரின் ஆளுகையிலேயே உள்ளது எனவும் பிரதேச செயலகத்தால் குறித்த இடம் ஆலயத்துக்கு வழங்கப்பட்டுள்ளது எனவும் மன்றுக்கு ஆலய நிர்வாகம் சார்பான சடடத்தரணிகளால் சுட்டிக்காட்டிடப்படடது
அனைத்து விடயங்களையும் ஆராய்ந்த நீதவான் கடந்த ஆறாம் மாதம் ஆறாம் திகதி இரண்டு தரப்பினரும் எந்தவித மத வழிபாடுகளுக்கும் இடையூறு இல்லாமல் வழிபாடுகளை மேற்கொள்ளுமாறும் அதை மீறுபவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உத்தரவிட்டிருந்தார்.
இந்த நிலையில் இந்த தீர்ப்புக்கு எதிராக பௌத்த துறவி மற்றும் பௌத்த துறவி சார்பில் மன்றில் ஆஜரான சட்டத்தரணிகள் உள்ளிட்டோரால் வவுனியா மேல் நீதிமன்றில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இன்றைய தினம் வவுனியா மேல் நீதிமன்றில் இது தொடர்பான வழக்கு விசாரணை இடம்பெற இருக்கின்றது.
கருத்து தெரிவிக்க