ஈரானின் எண்ணெய் கப்பல் சூப்பர் டாங்கர், ஐரோப்பிய ஒன்றியத்தின் தடையை மீறி சிரியாவுக்கு எண்ணெய் கொண்டு செல்லும் போது கைப்பற்றப்பட்டதாக இங்கிலாந்து தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. ஆனால் சிரியாவுக்கு எண்ணெய் கொண்டு செல்லப்படவில்லை, கப்பல் சர்வதேச கடற்பரப்பில் வைத்து கைப்பற்றப்பட்டுள்ளதாக ஈரான் கூறுகிறது. அத்துடன் இச்சம்பவம் தொடர்பில், சரியான பதிலடி கொடுப்போம் என்று ஈரானின் பாதுகாப்பு அமைச்சர் அமீர் ஹதாமி எச்சரிக்கை விடுத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
கருத்து தெரிவிக்க