வெளிநாட்டு செய்திகள்

ஈரான் அணு ஆயுதங்களை வைத்திருப்பது ஆபத்தை விளைவிக்கும் : பாம்பியோ எச்சரிக்கை

ஈரானின் யூரேனியம் செறிவூட்டல் தொடர்பில்  அணுசக்தி ஒப்பந்தத்தை மீறியதற்கு , ஈரான் மீது மேலும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அமெரிக்க வெளியுறவுத் துறை செயலாளர் மைக் பாம்பியோ எச்சரித்துள்ளார்.

ஈரானின் வெளியுறவுத் துறை பிரதி அமைச்சர் அப்பாஸ் அராச்சி , யுரேனியம் செறிவூட்டல் 3.6 சதவீதத்தை தாண்டும் என நேற்று தெரிவித்திருந்தார். இதையடுத்து ஈரானின் இந்த திட்டம் பொருளாதார தடைகளை ஏற்படுத்துவதோடு , அந்நாடு அணு ஆயுதங்களை ஏந்தியிருப்பது உலகிற்கு இன்னும் பெரிய ஆபத்தை ஏற்படுத்தும் என பாம்பியோ தெரிவித்துள்ளார்.

கருத்து தெரிவிக்க