” மக்கள் விடுதலை முன்னணியால் முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையை தோற்கடிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.” – என்று சபை முதல்வரும், அமைச்சருமான லக் ஷ்மன் கிரியல்ல தெரிவித்தார்.
அரசாங்கத்துக்கு எதிராக மக்கள் விடுதலை முன்னணியால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணைமீது 11 ஆம் திகதி மாலை வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது.
இந்நிலையில் குறித்த பிரேரணையை தோற்கடிப்பதற்கான சாதாரண பெரும்பான்மையை அரசாங்கம் கொண்டுள்ளதா என எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே சபை முதல்வர் மேற்கண்டவாறு கூறினார்.
” நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு எதிராக வாக்களிக்கப்படும் என ஐக்கிய தேசிய முன்னணியின் அங்கம் வகிக்கும் பங்காளிக்கட்சிகள் உறுதியளித்துள்ளன. கூட்டமைப்பின் ஆதரவும் கிடைக்கும். எனவே, எமது தரப்புக்கே வெற்றி உறுதி.” என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
கருத்து தெரிவிக்க