முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கிடையிலான விசேட கலந்துரையாடலொன்று நாளை மறுதினம் (10) காலை நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் நடைபெறவுள்ளது.
பொதுபலசேனா அமைப்பினால் கண்டியில் நடத்தப்பட்ட மாநாடு மற்றும் அமைச்சுப் பதவிகளை மீள ஏற்பதா, இல்லையா என்பது உட்பட சமகால அரசியல் நிலைவரங்கள் தொடர்பில் இதன்போது விரிவாக கலந்துரையாடப்படவுள்ளன.
குறிப்பாக முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்ந்தும் கூட்டாக செயற்படுவது குறித்தும் இச்சந்திப்பில் கவனம் செலுத்தப்படவுள்ளது.
கூட்டணியின் தலைமைப்பதவியை முன்னாள் அமைச்சர் பௌஸியிடம் ஒப்படைத்தால் அரசியல் ரீதியிலான முரண்பாடுகளை தவிர்த்துக்கொள்ளக்கூடியதாக இருக்கும் என முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் ஆலோசனை முன்வைத்துள்ளார்.
கருத்து தெரிவிக்க