அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள ரிட்ஜ்கிரெஸ்ட் நகரில் கடந்த வியாழக்கிழமை 6.4 ரிக்டர் அளவில் பாரிய நிலநடுக்கம் ஏற்பட்டது. அன்றைய தினம் அமெரிக்க சுதந்திர தினத்தை முன்னிட்டு விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டு இருந்தது.
இந்த நிலநடுக்கத்தால் வீடுகள் உட்பட பல கட்டிடங்களில் விரிசல்கள் ஏற்பட்டு சேதமடைந்தன. வீதிகளிலும் பல்வேறு இடங்களில் பிளவுகள் ஏற்பட்டன. 2 வீடுகளில் எரிவாயு கசிவு ஏற்பட்டு தீப்பிடித்தது. மேலும் அங்குள்ள ஒரு வைத்தியசாலையிலும் சேதங்கள் ஏற்பட்டன. அதனைத் தொடர்ந்து நோயாளிகளை அங்கிருந்து வெளியேற்றி வேறு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அத்துடன் இந்த நிலநடுக்கம் அமெரிக்காவில் 20 ஆண்டுகளின் பின்னர் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்து தெரிவிக்க