பாகிஸ்தானில் பயங்கரவாத அமைப்புகளுக்கு எதிராக கடும் நடவடிக்கைகள் எடுப்பதில்லை என கூறி, அந்த நாட்டுக்கு வழங்கி வந்த பயங்கரவாத ஒழிப்பு நிதியை அமெரிக்கா நிறுத்தியது. மேலும் பொய்களையும் வஞ்சகங்களையும் தவிர பாகிஸ்தான் வேறொன்றையும் வழங்கவில்லை என ட்ரம்ப் பகிரங்கமாக குற்றஞ்சாட்டியதில் இரு நாடுகளுக்குமான உறவில் பிளவு ஏற்பட்டது.
இந்நிலையில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் ட்ரம்ப்பை சந்திக்க எதிர்வரும் 20 ஆம் திகதி அமெரிக்கா செல்கிறார். இந்த சந்திப்பு 23 ஆம் திகதி நடைபெறும் என பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சு தெரிவித்துள்ளது. இச் சந்திப்பில் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவை புதுப்பிப்பது தொடர்பான பேச்சு வார்த்தைகள் இடம்பெறும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
கருத்து தெரிவிக்க