கோடீஸ்வரரான மொஹமட் சமூன் மொஹமட் ஷியாமின் மரண தண்டனையை மேன்முறையீட்டு நீதிமன்றம் உறுதிசெய்துள்ளது.
அத்துடன் அவருடைய மனைவி முர்ஷிடா ஷியாமுக்கான ஆயுள் தண்டனையையும் மேன்முறையீட்டு நீதிமன்றம் மீண்டும் உறுதிசெய்தது.
2003ஆம் ஆண்டு 9 கிலோ ஹெரோய்ன் போதைப்பொருளுடன் அவர்கள் கைதுசெய்யப்பட்டனர்
அவர்கள் இருவருக்கும் பிணைக்கோரி 2007ஆம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட மனு நேற்று விசாரணைக்கு வந்தபோதே தீர்ப்புக்கள் உறுதிசெய்யப்பட்டன.
2003ஆம் ஆண்டு நவம்பர் 23ஆம் திகதி கொழும்பு வோட் பிளேஸில் உள்ள ஷியாமின் வீட்டில் இருந்து 23 கிலோ ஹெரோய்ன் கைப்பற்றப்பட்டதாக முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
எனினும் அரச பகுப்பாய்வுத் திணைக்கள தகவலின்படி அதில் 9 கிலோகிராம் ஹெரோய்ன் மாத்திரமே இருந்ததாக உறுதிசெய்யப்பட்டது.
கருத்து தெரிவிக்க