தமது பதவிக்காலத்தை நீடித்துக்கொள்ள ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன நீதிமன்றத்தை நாடும் செயற்பாடு கொள்கைக்கு முரணான செயல் என்று விமர்சிக்கப்பட்டுள்ளது.
தாம் இரண்டாவது முறையில் தேர்தலில் போட்டியிடமாட்டேன் என்றுக்கூறிய மைத்ரிபால மேற்கொள்ளும் இந்த முயற்சியை தாம் கண்டிப்பதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் ரமேஸ் பத்திரன இந்த விமர்சனத்தை வெளியிட்டுள்ளார்.
தமது பதவிக்காலத்தை நீடித்துக்கொள்ளும் வகையில் மைத்ரிபால அடுத்த வாரத்தை நீதிமன்றத்தை நாடுவார் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஜனாதிபதி மைத்ரிபாலயின் பதவிக்காலம் 2015 ஜனவரி 9ஆம் திகதி ஆரம்பமானது.
எனினும் 19வது திருத்தம் நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்டபின்னர் மே மாதம் 19ஆம் திகதியே மைத்ரிபால கடமைகளை பொறுப்பேற்றார்.
இதனை வைத்துக்கொண்டே அவர் தமது பதவிக்காலத்தை நீடித்துக்கொள்ள முயற்சிக்கிறார் என்று ரமேஸ் பத்திரன குறிப்பிட்டுள்ளார்.
கருத்து தெரிவிக்க