வெளிநாட்டு செய்திகள்

பூமியை நோக்கி வரும் இராட்சத சிறுகோள் : நாசா தகவல்

பூமியை நோக்கி இராட்சத சிறுகோள் ஒன்று 2.700 மெகா டன் அழிவு சக்தியுடன் வேகமாக வந்து கொண்டிருப்பதாக நாசா அறிவித்துள்ளது. இதற்கு அஸ்ரோய்ட்  FT3 என்று பெயரிட்டுள்ளனர். இந்த சிறுகோள் கிட்டத்தட்ட 1.115 அடியும் 340 மீற்றர் விட்டமும் கொண்ட பாறையினால் ஆனது எனவும் தெரிவித்துள்ளனர்.

மேலும் 2019 ஆம் ஆண்டு தொடக்கம் 2119 ஆம் ஆண்டு வரை 165 சிறுகோள்கள் பூமியை தாக்கும் என நாசா தெரிவித்துள்ளது. இந்த FT3 சிறுகோள் இவ்வருடம் ஒக்டோபர் 3 ஆம் திகதி பூமியை நோக்கி வரும். அல்லது பூமியை தாண்டிச் செல்லும் என்றும் தெரிவித்துள்ளனர்.

அதன்படி இந்த சிறுகோள் பூமியை தாண்டிச் சென்றால் அழிவுகள் குறையும். ஆனால் பூமிக்கு நேராக வந்தால் நிச்சயம் பேரழிவு ஏற்படும் என்பதில் சந்தேகமில்லை என்றும் நாசா தெரிவித்துள்ளது.

கருத்து தெரிவிக்க