விளையாட்டு செய்திகள்

பாகிஸ்தானுக்கு 228 ஓட்ட இலக்கை நிர்ணயித்த ஆப்கானிஸ்தான்

உலக கிண்ண கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணிக்கு 228 ஓட்டங்களை இலக்காக ஆப்கானிஸ்தான் அணி நிர்ணயம் செய்துள்ளது.

உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான 36-வது லீக் ஆட்டம் நடைபெற்று வருகிறது.

இதில் நாணய சுழட்சியில் வென்ற ஆப்கானிஸ்தான் முதலில் துடுப்பெடுத்தாடியது. பாகிஸ்தா பந்துவீச்சில் நெருக்கடியை சந்தித்த ஆப்கான் அணி 227/9 ஓட்டங்களை பெற்றுள்ளது.

இந்நிலையில் பதிலுக்கு துடுப்பெடுத்தாடி வரும் பாகிஸ்தான் 7 ஓவர்களுக்கு 1விக்கட்டை இழந்து 32 ஓட்டங்களை பெற்றுள்ளது.

கருத்து தெரிவிக்க