உலக கிண்ண கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 37-வது லீக் ஆட்டம் தொடங்கியுள்ளது.
இதில் நாணயசுழட்சியில் வென்ற அவுஸ்திரேலிய அணி துடுப்பாட்டத்தை தெரிவு செய்துள்ளது.
இந்நிலையில் அவுஸ்திரேலிய அணி 16 ஓவர்களில் 3 விக்கட்டை இழந்து73 ஓட்டங்களை பெற்றுள்ளது.
7 ஆட்டத்தில் விளையாடி 6 வெற்றி, ஒரு தோல்வி என்று 12 புள்ளியுடன் முதலிடம் வகிக்கும் அவுஸ்திரேலியா, முதல் அணியாக அரைஇறுதிக்குள் நுழைந்துள்ளது.
நியூசிலாந்து அணி 5 வெற்றி, ஒரு ரத்து, ஒரு தோல்வி என்று 11 புள்ளியுடன் 3-வது இடத்தில் உள்ளது. முதல் 6 ஆட்டங்களில் தோல்வியே சந்திக்காத நியூசிலாந்து அணி, முந்தைய லீக்கில் பாகிஸ்தானிடம் தோற்றது.
இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்றால் நியூசிலாந்து அணி அரையிறுதிக்கு செல்வதற்கான வாய்ப்பை என்பது குறிப்பிடத்தக்கது .
கருத்து தெரிவிக்க