உள்நாட்டு செய்திகள்புதியவை

ஆயுர்வேத, சுதேச வைத்திய முறைமை பெறுமதியானது -ஜனாதிபதி

மேலைத்தேய வைத்தியதுறை முன்னேற்றமடைந்துள்ள போதும் எமது நாட்டின் சுதேச வைத்திய முறைமை பெறுமதி வாய்ந்தது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

மேலைத்தேய வைத்திய முறை மூலம் மக்களுக்கு கிடைக்கும் நன்மைகளைப் பார்க்கிலும் மோசடிகள் இடம்பெறுவது அந்த துறையிலுள்ள பெரும் பிரச்சினையாகும் எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

மன்னம்பிட்டி கிராமிய ஆயுர்வேத வைத்தியசாலையின் புதிய வாட்டுத் திறப்பு விழா நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

“எழுச்சிபெறும் பொலன்னறுவை” மாவட்ட அபிவிருத்தி செயற்திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்டுள்ள இந்த வாட்டுத் தொகுதிக்கு 165 இலட்சம் ரூபா செலவிடப்பட்டுள்ளது.

இவ்வாட்டுத் தொகுதி வெளிநோயாளர் சிகிச்சைப் பிரிவு உட்பட அனைத்து வசதிகளையும் கொண்டுள்ளது.

கருத்து தெரிவிக்க