இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் செயற்குழு மற்றும் மத்தியகுழு உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
இன்று சனிக்கிழமை இடம்பெற்ற பொதுக்குழுக் கூட்டத்தில் இந்தத் தெரிவுகள் இடம்பெற்றன.
இதில், சிரேஸ்ட துணைத் தலைவர்களாக பொ.செல்வராஜா மற்றும் சீ.வி.கே.சிவஞானம் ஆகியோரும் துணை பொதுச் செயலாளர்கள் ப.சத்தியலிங்கம், எம்.ஏ.சுமந்திரன் ஆகியோரும் இணைப் பொருளார்களாக பெ.கனகசபாபதி, வ. பனகேஸ்வரன் ஆகியோரும் உப தலைவர்களாக மு.ராஜேஸ்வரன் மற்றும் துரைரத்தினசிங்கம், இ.சாள்ஸ் நிர்மலநாதன், த. குருகுலராஜா, சி.சிவமோகன், அ.பரஞ்சோதி ஆகியோரும் தெரிவு செய்யப்பட்டனர்.
துணை செயலாளர்கள் எஸ்.எக்ஸ்.குலநாயகம், ஈ.சரவணபவான் யோகேஸ்வரன், அரியநேந்திரன், தண்டாயுதபாணி, சாந்தி சிறீஸ்கந்தராஜா, கே.வி.தவராசா, த.கலையரசன் ஆகியோரும் தெரிவு செய்யப்பட்டனர்.
அத்துடன் மாவட்ட ரீதியிலும் 12 உறுப்பினர்கள் இதன்போது தெரிவு செய்யப்பட்டனர்.
கருத்து தெரிவிக்க