வடக்கு செய்திகள்

75 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கால்நடைகளுக்கு மேச்சல் தரவைகள் தேவை

முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள  75 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கால்நடைகளுக்கான மேச்சல் தரவைகளை அமைக்கவேண்டிய தேவையிருப்பதாக  கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்களத்தின் உதவிப்பணிப்பாளர் கௌரி திலகன் தெரிவித்தார்.

” விவசாயம், கால்நடை வளர்ப்பு , மீன்பிடி என்பவற்றை பிரதானமான தொழிலாகக் கொண்டு மக்கள் வாழும் மாவட்டமாக முல்லைத்தீவு விளங்குகிறது.

எனினும், கால்நடைகளுக்கான மேச்சல் தரவைகள் இன்மையல் பண்ணையாளர்கள் கால்நடைகளை பராமரிப்பதில் பெரும் இன்னல்களை எதிர்கொள்கின்றனர்.

குறிப்பாக, காலபோகச்செய்கையின் போது முழுமையான விவசாய நடவடிக்கைககள் மேற்கொள்ளப்படுகின்ற சந்தர்ப்பங்களில் கால்நடைகளை பராமரிப்பதில் பண்ணையாளர்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்கின்றனர். ” என்றும் அவர் கூறினார்.

 

கருத்து தெரிவிக்க