விளையாட்டு செய்திகள்

சச்சின், லாராவின் சாதனைகளை முறியடித்த விராட் கோலி

சர்வதேச கிரிக்கெட்டில் 20 ஆயிரம் ஓட்டங்களை வேகமாக கடந்து கோலி சாதனை படைத்துள்ளார்.

உலக கிண்ண கிரிக்கெட்டில் நேற்றைய மேற்கிந்திய அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணித்தலைவர் விராட் கோலி 37 ஓட்டங்கள் எடுத்த போது, ஒட்டுமொத்த சர்வதேச கிரிக்கெட்டில் (டெஸ்ட், ஒரு நாள் மற்றும் 20 ஓவர் போட்டி) 20 ஆயிரம் ஓட்டங்களை கடந்தார்.

இதன் மூலம் இந்த மைல்கல்லை அதிவேகமாக கடந்த வீரர் (417-வது இன்னிங்ஸ்) என்ற புதிய சாதனைக்கு அவர் சொந்தக்காரர் ஆகியுள்ளார்.

இதற்கு முன்பு ஜாம்பவான்களான இந்தியாவின் சச்சின் டெண்டுல்கர், மேற்கிந்திய அணியின் பிரையன் லாரா ஆகியோர் தங்களது 453-வது இன்னிங்சில் இந்த இலக்கை எட்டியதே அதிவேகமாக காணப்பட்டது.

அவர்களின் சாதனையை 30 வயதான கோலி முறியடித்துள்ளார்.

அதே சமயம் மொத்தத்தில் 20 ஆயிரம் ஓட்டங்களுக்கு மேல் எடுத்தவர்களின் பட்டியலில் கோலி 12-வது வீரராகவும், இந்திய அளவில் 3-வது வீரராகவும் இணைந்தார்.

கருத்து தெரிவிக்க