யாழ். வட்டுக்கோட்டை பிக்னல் மைதானத்தில் இளம் குடும்பத்தலைவர் ஒருவர் படு கொலை செய்யப்பட்டமை தொடர்பில் 6 பேருக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகை மீதான விசாரணைகளை செப்ரெம்பர் 5ஆம் திகதி தொடக்கம் நாளாந்த விளக்கத்துக்கு எடுக்க யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் இன்று தவணையிட்டது.
அத்துடன், சந்தேகநபர்கள் தரப்பில் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை ஏற்ற நீதிமன்று வழக்கின் அத்தனை சாட்சிகளையும் மன்றில் மீளவும் முற்பட உத்தரவிடப்பட்டது.
வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரிக்கும், யாழ்ப்பாணம் சென்.பற்றிக்ஸ் கல்லூரிக்கும் இடையில் நடந்த ராஜன் கதிர்காமர் வெற்றிக்கிண்ணத்துக்கான 50 ஓவர்கள் துடுப்பாட்ட போட்டி 2014ஆம் ஆண்டு மார்ச் மாதம் 15ஆம் திகதி வட்டுக்கோட்டை பிக்னல் மைதானத்தில் இடம்பெற்றது.
இந்தப் போட்டில் இருதரப்பினருக்கு இடையே முறுகல் ஏற்பட்டு அது கைகலப்பாக மாறியது. கைகலப்பில் யாழ்ப்பாணம் பிரதான வீதியைச் சேர்ந்தவரும் சென்.பற்றிக்ஸ் கல்லூரியின் பழைய மாணவனுமான ஜெயரட்ணம் டினோசன் அமலன் (வயது 24) என்னும் ஒரு பிள்ளையின் தந்தை உயிரிழந்தார்.
சம்பவத்துடன் தொடர்புடைய 6 பேருக்கு எதிராக கொலைக் குற்றச்சாட்டின் கீழான குற்றப்பத்திரிகை யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் சட்ட மா அதிபரால் தாக்கல் செய்யப்பட்டது.
கருத்து தெரிவிக்க