விளையாட்டு செய்திகள்

உலக கிண்ண கிரிக்கட்:இலங்கை 203 ஓட்டங்களை பெற்றது

உலக கிண்ண கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி தென்னாபிரிக்க அணிக்கு 204 ஓட்ட இலக்கு நிர்ணயம் செய்துள்ளது.

உலக கிண்ண தொடரில் இலங்கை- தென்னாபிரிக்க அணிகள் இன்று மோதி வருகின்றன.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற தென்னாபிரிக்க அணி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்த நிலையில் இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடியது.

இந்த போட்டியில் 49 .3 ஓவர்களில் இலங்கை அணி சகல விக்கட்டுக்களையும் இழந்து 203 ஓட்டங்களை பெற்றுள்ளது.

இந்நிலையில் பதிலுக்கு துடுப்பெடுத்தாடி வரும் தென்னாப்பிரிக்க 8 ஓவர்களுக்கு ஒரு விக்கட்டை இழந்து 36.ஓட்டங்களை பெற்றுள்ளது.

கருத்து தெரிவிக்க