உள்நாட்டு செய்திகள்முக்கிய செய்திகள்

மரண தண்டனைக்கு மஹிந்தவும் போர்க்கொடி!

இலங்கையில் மரண தண்டனையை மீண்டும் நடைமுறைப்படுத்தும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தீர்மானத்துக்கு எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளார்.

மாத்தறையில் இன்று (28) நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டிருந்த மஹிந்த ராஜபக்சவிடம், மரண தண்டனை  குறித்து எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

” மரண தண்டனையை நிறைவேற்றுமாறு எனது ஆட்சியின்போதும் கோரிக்கைகள் விடுக்கப்பட்டன. எனினும், அதற்கு நான் அனுமதி வழங்கவில்லை. மரண தண்டனைக்கு எதிரானவன் நான்.

தற்போதைய சூழ்நிலையில் ஜனாதிபதியால் எடுக்ககூடிய தீர்மானம் இதுவாக இருந்திருக்ககூடாது என்பதே எனது கருத்தாகும்.

மக்களை தூக்கிலிட்டு ஜனாதிபதியாக முடியுமா? அந்த நோக்கத்தில் ஜனாதிபதி இந்த தீர்மானத்தை  எடுத்திருக்ககூடும் என நான் நம்பவில்லை.” என்றும் மஹிந்த ராஜபக்ச குறிப்பிட்டார்.

 

 

கருத்து தெரிவிக்க