புதியவைமலையகச் செய்திகள்

நிர்வாகம் கண்டுகொள்வதில்லை: சென்கிளயர் ஸ்டேலின் மக்கள்

சென்கிளயர் ஸ்டேலின் தோட்டத்தில் குளவிக்கொட்டியதில் 15க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தோட்ட நிர்வாகத்தின் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இன்று காலை 10.30 மணியளவில் கொழுந்து பறிப்பதற்காக 2ம் இலக்க தேயிலை மலைக்கு வேலைக்கு சென்ற போது தேயிலைச்செடிக்கு கீழிருந்த குளவி கூடு களைந்து எம்மை தாக்கியது.

குறித்த பகுதியில் குளவி உள்ளதெனவும் அதனை பாதுகாப்பாக அகற்ற நடவடிக்கை எடுக்குமாறும் நாம் தோட்ட நிர்வாக அதிகாரிக்கு தெரிவித்துள்ளோம் எனினும் நடவடிக்கை எடுப்பதாக இல்லை.

குளவி கொட்டுக்கு இலக்கான ஒருவர் அண்மையில் உயிரிழந்துள்ளார். ஆன போதும் இந்த பிரச்சினைக்கு தீர்வு கிடைப்பதாக இல்லை.

நாம் தொடர்ச்சியாக தோட்ட நிர்வாகங்களால் அலட்சியப்படுத்த படுகிறோம் என பாதிக்கப்பட்ட தோட்ட மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

சென்கிளயர் ஸ்டேலின் தோட்டத்தில் குளவிக்கொட்டு தாக்குதலுக்கு உள்ளான தோட்ட தொழிலாளர்கள் கொட்டக்கலை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

குளவி தாக்குதலின் போது அவ்வழியாக சென்ற முச்சக்கரவண்டி சாரதி ஒருவரும் தாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க