தெற்காசிய மனித உரிமைகள் அமைப்பு இலங்கையில் மரணதண்டனை நிறைவேற்றுவதற்கான ஜனாதிபதி மைத்திரியின் அனுமதி குறித்து கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளது .
4 குற்றவாளிகளுக்கு மரணதண்டனை நிறைவேற்றுவதற்கான அறிக்கையில் ஜனாதிபதி கையெழுத்திட்டுள்ள நிலையில் தெற்காசிய மனித உரிமைகள் அமைப்பு ஊடக சந்திப்பொன்றை ஏற்பாடு செய்துள்ளது.
இந்த சந்திப்பில் ஜனாதிபதி மைத்திரி மீது கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளது.
‘சமீபத்திய மாதங்களில் மரண தண்டனையை இரத்து செய்யும் நோக்கில் பல்வேறு நிகழ்வுகளுக்கு இலங்கை ஜனாதிபதியை அழைத்திருந்தோம்.
அதேபோல 2017 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகளின் மரணதண்டனை தொடர்பான தடைக்கு ஆதரவாக இலங்கை அரசாங்கம் வாக்களித்துள்ளது.
இந்த நிலையில் ஜனாதிபதி எடுத்திருக்கும் இந்த முடிவு, தமது உத்தரவாதத்தையும் சர்வதேச சட்டம் மற்றும் தரங்களையும் மீறுவதாக அமைந்துள்ளது.
மரண தண்டனை நிறைவேற்றம் என்பது இலங்கை அரசியலமைப்பின் கீழ் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ள சித்திரவதைகளற்ற வாழ்க்கை மற்றும் தண்டனையிலிருந்து விடுபடுவதற்கான உரிமையை மீறுவதாக உள்ளதாக நாம் நம்புகின்றோம்.
“மரண தண்டனையை அமல்படுத்துவதற்கான முடிவை உடனடியாக நிறுத்தி, வாக்குறுதியளிக்கப்பட்ட மனித உரிமைகள் மற்றும் கடமைகளை நிறைவேற்றுமாறு ஜனாதிபதியை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்” என்று தெற்காசிய மனித உரிமைகள் அமைப்பு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கருத்து தெரிவிக்க