விளையாட்டு செய்திகள்

உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் இலங்கை அணி பின்நிலை!

உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் இலங்கை அணி புள்ளிப்பட்டியலில் தற்போது 7ஆம் இடத்துக்கு பின்தள்ளப்பட்டுள்ளது.

நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற லீக் போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றது.

இதனையடுத்து, பாகிஸ்தான் அணி 2 புள்ளிகளுடன் மொத்தமாக 7 புள்ளிகளைப் பெற்று 6ஆம் இடத்துக்கு முன்னேறியது.

இதன்படி, 12 புள்ளிகளைப் பெற்ற அவுஸ்ரேலிய அணி தொடர்ந்தும் முதலிடத்தில் உள்ளது. 11 புள்ளிகளைப் பெற்ற நியூசிலாந்து அணி இரண்டாம் இடத்திலும் 9 புள்ளிகளைப் பெற்ற இந்தியா மூன்றாம் இடத்திலும், எட்டுப் புள்ளிளை பெற்ற இங்கிலாந்து நான்காம் இடத்திலும் பங்களாதேஷ் மற்றும் பாகிஸ்தான் ஆகிய அணிகள் தலா 7 புள்ளிகளைப் பெற்று முறையே ஐந்தாம் ஆறாம் இடங்களிலும் உள்ளன.

இந்த நிலையில், 6 புள்ளிகளுடன் இலங்கை 7ஆம் இடத்திலும் மேற்கிந்திய தீவுகள் மற்றும் தென்னாபிரிக்க அணிகள் தலா மூன்று புள்ளிகளைப் பெற்று எட்டாம் ஒன்பதாம் இடங்களிலும் எந்தப் புள்ளியையும் பெறாத ஆஃப்கானிஸ்தான் அணி 10ஆம் இடத்திலும் உள்ளன.

கருத்து தெரிவிக்க