உள்நாட்டு செய்திகள்

எலிக்காய்ச்சலால் 2,166 பேர் பாதிப்பு!

எலிக் காய்ச்சலால் (Leptospirosis) இவ்வருடத்தில் இதுவரையான காலப்பகுதியில் 2 ஆயிரத்து 166 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இரத்தினபுரி மாவட்டத்திலேயே அதிகளவானோர் பாதிக்கப்பட்டுள்ளனர் (406).

‘மழைக்காலத்தில் வீட்டைச் சுற்றிலும், தெருக்களிலும் தண்ணீர் தேங்கும்போது, எலி, பெருச்சாளி போன்றவையும் அந்தத் தண்ணீரில் நடக்கும். அப்போது அவற்றின் சிறுநீர்க் கழிவும் அதில் கலக்கும். அந்தக் கழிவுகளில் லெப்டோஸ்பைரா எனும் கிருமிகள் இருந்தால் எலிக் காய்ச்சல்  வரும்.

வயல் நிலங்களிலும் அச்சுறுத்தல் அதிகமாகவே காணப்படுகின்றது.

எனவே, காய்ச்சல், குமட்டல், தசை வலி  , வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டால் உடன் வைத்தியரை நாடுமாறு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க