ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு ஆதரவளித்துவரும் சிறு கட்சிகளை தம் பக்கம் வளைத்துபோடும் முயற்சியில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நிறுவுனரான பஸில் ராஜபக்ச ஈடுபட்டுள்ளார்.
இதன்ஓர் அங்கமாக ஈ.பி.டி.பியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவுடன் நேற்று பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
புதிய அரசியல் கூட்டணி, ஜனாதிபதித் தேர்தல் உட்பட மேலும் சில விடயங்கள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளன.
அத்துடன், ஏனைய கட்சிகளின் தலைவர்களையும் பஸில் ராஜபக்ச இவ்வாரத்தில் சந்திக்கவுள்ளார். இதன்படி இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ், தேசிய காங்கிரஸ், ஜனநாயக மக்கள் காங்கிரஸ் உட்பட மேலும் சில கட்சிகளுடன் அவர் பேச்சு நடத்துவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய மாநாடு ஆகஸ்ட் மாதம் 11 ஆம் திகதி நடைபெறவுள்ளது. இதன்போது ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு ஆதரவளிக்கும் சிறு கட்சிகளின் தலைவர்களையும் மேடையேற்ற செய்யும் நோக்கிலேயே இந்நகர்வு முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.
கருத்து தெரிவிக்க