உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சமீபத்திய செய்திகள்சிறப்பு செய்திகள்முக்கிய செய்திகள்

ஜனாதிபதிக்கும் அரசாங்கத்துக்கும் முறுகல்: ஐக்கிய நாடுகள் விமர்சனம்

இலங்கையில் ஜனாதிபதிக்கும் அரசாங்கத்துக்கும் இடையிலான ஒற்றுமையின்மை காரணமாக பொதுமக்களுக்கான பாதுகாப்பு விடயத்தில் பிரச்சினை தோன்றியுள்ளது.

இது தொடர்பில் தாம் அவதானம் செலுத்தியுள்ளதாக ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணாயாளர் மிச்செய்ல் பெச்சலெட் தெரிவித்துள்ளார்.

மனித உரிமைகள் ஆணைக்குழுவின் 41வது அமர்வை ஆரம்பித்து வைத்து நேற்று உரையாற்றியபோதே அவர் இதனைக்குறிப்பிட்டார்.

இரண்டு மாதங்களுக்கு முன்னர் இலங்கையில் இடம்பெற்ற தாக்குதல்கள் காரணமாக பதற்ற நிலை தோன்றியுள்ளதாகவும் ஆணையாளர் தெரிவித்தார்.

இந்த தாக்குதல்களுக்கு முன்னர் மேற்கொள்ளப்பட்ட எச்சரிக்கைகள் கவனத்தில் கொள்ளப்படவேண்டும்.
இதேவேளை அவசரகால சட்டம் குறுகிய காலத்தில் தளர்த்தப்படவேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

கருத்து தெரிவிக்க