வெளிநாட்டு செய்திகள்

ஈரான் மீது கடுமையான பொருளாதார தடை :

அணு ஆயுத தடை ஒப்பந்தம் தொடர்பாக அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே கடும் முறுகல் நிலை தொடர்கின்ற  நிலையில்,  ஈரானின் வான் பரப்பில் பறந்த அமெரிக்காவின் உளவு விமானத்தை ஈரான் சுட்டு வீழ்த்தியதில் ஆத்திரம் அடைந்தது அமெரிக்கா.

எனவே ட்ரம்ப், ஈரான் மீது தாக்குதல் நடத்த  உத்தரவிட்டு , பின் கடைசி நேரத்தில் திட்டம் கைவிடப்பட்டது. எனினும் ஈரானுக்கு ஏதாவது தண்டனை அளிக்க அமெரிக்கா வழி தேடியது.

இந்நிலையில் ஈரானுக்கு எதிராக அமெரிக்கா கடுமையான பொருளாதார தடையை விதித்துள்ளது. மேலும் ஈரானின் தலைவர், அதிகாரிகள் அமெரிக்காவில் பண பரிமாற்றங்கள் செய்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கான நிறைவேற்று ஆணையில் ட்ரம்ப் கையெழுத்திட்டார்.

இது தொடர்பாக தனது ஓவல் அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ட்ரம்ப் , ” ஈரான் உட்பட எந்த நாட்டுடனும் நாங்கள் மோதலை விரும்பவில்லை. எனினும் ஈரான் அணு ஆயுதங்களை வைத்திருப்பதற்கு நாங்கள் விடமாட்டோம்.” என தெரிவித்திருந்தார்.

கருத்து தெரிவிக்க