மலையகச் செய்திகள்

உயிராபத்தை தவிர்க்க சிறுவர் கடவை கோரும் காட்மோர் மக்கள்

டீசைட் தமிழ் வித்தியாலயமானது மஸ்கெலிய காட்மோர் பிரதான வீதியருகே அமைந்துள்ளதால் மாணவர்கள் ஆபத்தை எதிர்கொள்வதாக பிரதேச மக்களும் ஆசிரியர்களும் சுட்டிகாட்டுகின்றனர்.

இந்த பாடசாலைக்கும் பிரதான பாதைக்கும் இடையே 10 அடி வரையிலான தூரமே உள்ளது. இந்த பாதையை கடந்து மாணவர்கள் பாடசாலை செல்லும் போது வாகனங்களினால் ஆபத்துக்கள் ஏற்பட்ட வாய்ப்புள்ளது என பிரதேச மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர் .

குறித்த பாதையில் வாகனங்களில் சிக்குண்டு வளர்ப்பு நாய்கள் ஏனைய உயிரினங்கள் இறந்துள்ளது; இவ்வாறான நிலை தமது பிள்ளைகளுக்கு ஏற்படக்கூடிய பேராபத்தை தடுக்க வேண்டும்.

சிறுவர் கடவை ஒன்றை அமைத்து தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டுமென பிரதேச மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர் .

இது தொடர்பில் வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கும் இப்பகுதியிலுள்ள அரசியல் தலைவர்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர் .

கருத்து தெரிவிக்க