உள்நாட்டு செய்திகள்முக்கிய செய்திகள்

‘ தமிழ் மக்களின் உரிமைகளுக்காக குரல் கொடுத்த சிங்களவன் நான்’

” நான் இனவாதி அல்லன். நீதிக்காகவே குரல்கொடுத்துவருகின்றேன்.”  – என்று பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்தார்.

இத்தாலியில் இன்று ( 24) நடைபெற்ற விசேட தேவ ஆராதனையில் கலந்துகொண்டிருந்த பேராயரிடம்,  அமைச்சர் மங்கள சமரவீரவால் வெளியிடப்பட்ட ‘ டுவிட்டர்’ பதிவு குறித்து ஊடகவியலாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளிக்கையிலேயே பேராயர் மேற்கண்டவாறு கூறினார்.

” நான் இனவாதியா? நெருக்கடியான சூழ்நிலையின்போதுகூட நாட்டின் நலனைக்கருதியே செயற்பட்டேன்.  ஏன்! தமிழ் மக்களின் உரிமைகளுக்காக குரல் எழுப்பிய சிங்கள நபர் நான்.

அந்த நபரின் ( அமைச்சர் மங்கள) கருத்து தொடர்பில் பரிசுத்த பாப்பரசருக்கு எதுவுமே தெரியாது. என்னிடம் இது குறித்து அவர் எதையும் கேட்கவில்லை.” என்றும் பேராயர் குறிப்பிட்டார்.

அத்துடன், கசினோ நிலையங்களை திறக்கவேண்டும் என அரசியல்வாதியொருவர் யோசனை முன்வைத்துள்ளார். அவர் எமது மதத்தை சேர்ந்தவர் என்பதால் வெட்கமடைகின்றோம் என்றும் பேராயர் தெரிவித்தார்.

அதேவேளை, விசேட ஆராதனையின்போது உரையாற்றிய அவர் ,

” நாட்டில் தற்போதுள்ள அரசியல்வாதிகள் ஓய்வுபெற்று புதியவர்களுக்கு வாய்ப்பளிக்கவேண்டும்.  தங்களுக்கு முடியாது என்பதை அரசியல்வாதிகள் நிரூபிதுக்காட்டியுள்ளனர். எனவே, அவர்கள் விடைபெறுவதுதான் ஒரே வழி. ” என்றும் சுட்டிக்காட்டினார்.

 

 

கருத்து தெரிவிக்க