விளையாட்டு செய்திகள்

உலக கிண்ண கிரிக்கட் : பங்களாதேஷ் 262 ஓட்டங்களை பெற்றது

உலக கிரிக்கட் கிரிக்கெட் போட்டியில் பங்களாதேஷ் அணி ஆப்கானிஸ்தான் அணிக்கு 263 ஓட்டங்களை இலக்காக நிர்ணயம் செய்துள்ளது.

உலக கிண்ண கிரிக்கட் தொடரில் சவுதம்டனில் இன்று இடம்பெறும் 31–வது லீக் போட்டியில் ஆசிய அணிகளான பங்களாதேஷும் , ஆப்கானிஸ்தானும் மோதி வருகின்றன.

நாணய சுழட்சியில் வென்ற ஆப்கானிஸ்தான் முதலில் பந்து வீச்சை தெரிவு செய்த நிலையில் பங்களாதேஷ் ஓரளவு நிதானமாக துடுப்பெடுத்தாடி 262 ஓட்டங்களை பெற்றது.

இந்நிலையில் பதிலுக்கு துடுப்பெடுத்தாடி வரும் ஆப்கானிஸ்தான் 16 ஓவர்கள் முடிவில் ஒரு விக்கட்டை இழந்து 60 ஓட்டங்களை பெற்றுள்ளது.

கருத்து தெரிவிக்க