நாட்டின் பல பகுதிகளிலும் சீரற்ற காலநிலை இன்று திங்கட்கிழமையும் தொடரும் என வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.
இதன்படி சப்ரகமுவ, மத்திய மாகாணங்களிலும் களுத்துறை மாவட்டத்திலும் அவ்வப்போது மழை பெய்யக் கூடும். மேல் மாகாணத்திலும் காலி, மாத்தறை மாவட்டங்களிலும் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், வடமேல் மாகாணத்திலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் சிறிதளவான மழை பெய்யக் கூடிய சாத்தியம் உள்ளதாக வானிலை அவதான நிலையம் குறிப்பிட்டுள்ளது.
ஊவா மாகாணத்திலும் மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும் சில இடங்களில் மாலையில், மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் உள்ளது.
கருத்து தெரிவிக்க